சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில் இதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கு பெறாதது பேசும் பொருளாக மாறி உள்ளது.
இபிஎஸ், செங்கோட்டையன் இடையே மீண்டும் மோதலா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
2026 தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டார் இபிஎஸ். கோவையில் பரப்புரையை தொடங்கியபோது, அவருடன் செங்கோட்டையன் இல்லாததது பேசுபொருளாகியுள்ளது.
ஏற்கனவே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, அந்த பிரச்னை சுமுகமாக முடிந்தது. இந்நிலையில், மீண்டும் பனிப்போர் தொடங்கிவிட்டதாக பேசப்படுகிறது. அதேநேரத்தில், ஈரோட்டுக்கு இபிஎஸ் பரப்புரைக்கு செல்லும்போது, செங்கோட்டையன் உடனிருப்பார் என கட்சி நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். ஈரோட்டில் நடக்கும் தேர்தல் பரப்புரையில் செங்கோட்டையில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.