சென்னை: சென்னையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுகவினர் சந்திக்க உள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தங்கமணி, வேலுமணி, கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் அமித் ஷாவை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். 2026 சட்டசபை தேர்தலுக்கான அதிமுக-பாஜக கூட்டணியை உறுதி செய்யும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக சார்பில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொழிலதிபர்கள் உள்பட 38 பேரை சந்திக்க அமித்ஷா நேரம் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் அமித் ஷாவை சந்திக்கிறார். அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக நிர்வாகிகளை சந்திக்க அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை வந்துள்ள அமித்ஷா மதியம் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார்.