சென்னை: தமிழக அரசின் டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் அவை வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் பட்ஜெட் உரை தொடங்கும்முன்னரே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பின்னர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக, பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.