புதுடில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ொடர்பாக டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது
ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து திடீரென தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, பயங்கரவாதிகளைப் பிடிக்க ராணுவத்தினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு நேற்று அழைப்பு விடுத்தது. இந்நிலையில், ஜம்மு- காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம் கூடியது. அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதேபோல், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்டோரும் கட்சி கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும், காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைத்துக் கட்சி கூட்டத்திங் பங்கேற்றுள்ளனர். திமுக சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.