சென்னை: சுற்றுலா வழிகாட்டி பணியை செய்யாமல், உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா கவனிக்க வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். “எங்கே போனாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர் என்றுதான் சொல்கிறார்கள்…” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய அவதூறான கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அமித்ஷா முதலில் உள்துறை அமைச்சர் பொறுப்பை சரியாக கவனிக்க வேண்டும். அம்பேத்கர் கொடுத்த அரசியல் சட்டத்தை எப்படியாவது சிதைத்து விடலாம் என்று அலறி அடித்துக் கொண்டு திரியும் பாசிஸ்டுகள், அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் அடைகிறார்கள் என்றால், அம்பேத்கரின் பெயரை நூறு மடங்கு உயர்த்தி குரல் கொடுப்போம். அம்பேத்கர் வாழ்க. அம்பேத்கரின் புகழ் ஓங்கட்டும் என, துணை முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.