சென்னை: முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். அவருக்கு தமிழக பாஜக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பேரன் திருமணம் மாமல்லபுரத்தில் நடக்கிறது.
இதில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை வருகிறார். இதையொட்டி அமித் ஷாவுக்கு விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க பாஜக சென்னை பெரிய கோட்டம் திட்டமிட்டுள்ளது. மாநில தலைவர் அண்ணாமலை, மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத், மாநில விளையாட்டுத் துறை தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு பொறுப்பாளர்களாக உள்ளனர்.
பரதநாட்டியம், பறை இசை, செண்டை மேளம், சிவ வாத்தியம், கரகடம், ஒயிலாட்டம், சென்னை கானா, திருநங்கைகள் நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பா.ஜ.க. ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக அண்ணாமலை நேற்று பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். வெங்கையா நாயுடு இல்லத்தில் நடைபெறும் திருமண விழாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர்.
சென்னை காவல்துறை செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கர், இன்று சென்னை வந்து, முட்டுக்காடு, மாமல்லபுரத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். எனவே, இன்று சென்னை மாநகர காவல் எல்லை, சென்னை விமான நிலையம், ராஜ்பவன், விவிஐபி பயண வழித்தடங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு, ஆளில்லா விமானங்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும்.
மைக்ரோலைட் விமானங்கள், பாராகிளைடர்கள், பாராமோட்டர்கள், ஹேண்ட் கிளைடர்கள், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் பறப்பதில் இருந்து,” என்று அறிவிக்கப்பட்டது. துணை ஜனாதிபதி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் வருகையை முன்னிட்டு, கிழக்கு கடற்கரை சாலையில், இன்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர். எனவே, சென்னை விமான நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை செல்லும் வாகனங்கள், பழைய மாமல்லபுரம் சாலையை (ஓஎம்ஆர்) மாற்றுப்பாதையாக பயன்படுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.