ஜார்கண்ட்: ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தன்பாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசுகையில், “காங்கிரஸ் இடஒதுக்கீட்டுக்கு எதிரான கட்சி. பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கும் வழங்க விரும்புகிறது.
பிஜேபி எம்எல்ஏ இருக்கும் வரை முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மாட்டோம். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அமைச்சர் ஆலம்கீர் ஆலம் வீட்டில் இருந்து ரூ. 35 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்பி வீட்டில் இருந்து ரூ. 350 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது யாருடைய பணம்? இது தன்பாத் இளைஞர்கள் மற்றும் தாய்மார்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம்.
இப்படி கொள்ளையடிப்பதைத் தொடரலாம் என்று நினைக்கிறார்கள். நீங்கள் பாஜக ஆட்சி அமைக்கிறீர்கள். நாங்கள் அவர்களை கவனித்துக்கொள்கிறோம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ரூ. 1000 கோடி ஊழல் நடந்துள்ளது. நில ஊழல், சுரங்க ஊழல் போன்ற ஊழல் அரசு இந்த அரசு.
ஜார்க்கண்டில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் எங்களது தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். பெண்களுக்கு மாதந்தோறும் 2,100 ரூபாய் வழங்கப்படும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 500, தீபாவளி மற்றும் ரக்ஷா பந்தன் கொண்டாட்டங்களின் போது 2 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ. 2,000 நிதியுதவியாக ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 3,100 வாங்கப்படும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு ஓய்வூதியம் ரூ. 2,500 உயர்த்தப்படும். ஜார்கண்டில் வங்கதேசத்தினர் ஊடுருவி வருகின்றனர். பழங்குடியினப் பெண்களை 2-3 முறை திருமணம் செய்து கொள்கிறார்கள்.
அவர்களின் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், ஊடுருவும் நபர்களை கண்டறிந்து, இங்கிருந்து விரட்டியடிக்கப்படுவர்,” என்றார். ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவம்பர் 23-ல் வாக்குகள் எண்ணப்படுகின்றன. கடந்த சட்டசபை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 25 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.