புதுடில்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் 5ம் தேதி நடக்கிறது. இதற்காக பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தார்.
டெல்லியில் வரும் 5ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில், ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இத்தேர்தலில் மொத்தம் 699 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். டெல்லியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நரேந்திர மோடி நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.