டெல்லி: மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இரு அவைகளிலும் திமுக நோட்டீஸ் கொடுத்துள்ளது. தொகுதி மறுவரையறை தொடர்பாக ராஜ்யசபாவில் விவாதம் நடத்த பேரவை துணைத் தலைவர் அனுமதி மறுத்துள்ளார்.
திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, வில்சன் ஆகியோர் சட்டப்பேரவையை ஒத்திவைத்து, நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை குறித்து விவாதம் நடத்தக் கோரி நோட்டீஸ் அளித்தும், அவைத் தலைவர் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள மறுத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்களும் ராஜ்யசபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்யசபா திமுக குழு தலைவர் திருச்சி சிவா; தென் மாநிலங்களின் நியாயமான பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் வகையில் ஒரு தொகுதி மறுவரையறை திட்டம் உள்ளது. தொகுதி மறுவரையறை தென் மாநிலங்களின் நியாயமான பிரதிநிதித்துவத்தை பாதிக்கும்.
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், அது இந்தியாவின் கூட்டாட்சி முறையை பாதிக்கும். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு தென் மாநிலங்களை ஏமாற்றி வருகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களில் தொகுதிகள் குறைக்கப்படுமா? விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், அது எந்த விகிதாச்சாரத்தில் உள்ளது என்பதற்கு விளக்கம் தேவை; உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் சொல்ல வேண்டும் என்றார்.