ஆந்திரா : ஹிந்தி தேசிய மொழி என்று ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு அதிரடி தெரிவித்துள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு சட்டப்பேரவையில் மும்மொழி கொள்கையை ஆதரித்து பேசியுள்ளார். மொழி வெறுப்பதற்கான ஒன்று அல்ல எனக் கூறிய அவர், ஆந்திராவில் தாய்மொழி தெலுங்கு, தேசிய மொழி ஹிந்தி, சர்வதேச மொழி ஆங்கிலம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே துணை முதல்வர் பவன் கல்யாண் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பேசியுள்ள நிலையில் தற்போது சந்திர பாபு நாயுடுவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கண்டன குரல்கள் எழுப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.