விஜயவாடா: ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் குட்லவல்லேரு பகுதியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில், 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
மாணவிகளுக்கு தனி விடுதி வசதி உள்ளது. இதில் தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கி வகுப்புக்கு செல்கின்றனர்.
இந்நிலையில், விடுதியில் தங்கியுள்ள மாணவி வியாழக்கிழமை நள்ளிரவு கழிவறைக்குச் சென்றபோது, அங்கு பொருத்தப்பட்டிருந்த மிகச் சிறிய ரகசிய கேமராவைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே சக மாணவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
கேமராவை பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து விசாரித்ததில், அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் விஜய், மாணவியின் உதவியுடன் சில குளியலறைகளில் ரகசிய கேமராவை பொருத்தி வெளியாட்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
அதன்பின், இருவரையும் சக மாணவர்கள் அடித்து உதைத்தனர். இது குறித்து விஜயவாடா போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமைச்சர் கொல்ல ரவீந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் எஸ்.பி. ஆகியோரை நேரில் சென்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.