தஞ்சாவூர்: சிபிஎம் மூத்த தலைவர், தகைசால் தமிழர் என்.சங்கரய்யா இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாவட்டக்குழு அலுவலகத்தில் நினைவஞ்சலி நிகழ்ச்சி சனிக்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் டி.ரவீந்திரன், சாமி.நடராஜன், மூத்த தலைவர் என்.சீனிவாசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.செந்தில்குமார், என்.வி.கண்ணன், என்.சரவணன், மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.குருசாமி, ஆர்.எஸ்.வேலுச்சாமி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் அர்ஜூன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தோழர் என்.சங்கரய்யா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.