விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழ்நாடு வெற்றிக் கழக மாநாடு நடத்த காவல்துறை நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது.
விஜய் கட்சி மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் டிஎஸ்பி தெரிவித்துள்ளார்.
மாநாடு நடைபெறும் இடம் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளதால் போக்குவரத்து பாதிக்காமல் நடத்த வேண்டும்.
குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை மாநாட்டில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.