சென்னை: “தமிழகத்திற்கு வழங்க வேண்டிய, 4,034 கோடி ரூபாயை விடுவிக்காமல், கிராமப்புற மக்களின் வாழ்வில் மத்திய அரசு விளையாடுகிறது. இதுபோன்ற காரணங்களால், ஏப்., 6-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடியை கண்டித்து, தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும்,” என, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதில் இருந்து ஜனநாயக விரோத திட்டங்களை கொண்டு தமிழகத்தையும், தமிழர்களையும் வஞ்சித்து வருகிறது. இந்தித் திணிப்பு, மும்மொழிக் கொள்கை, புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மாவட்டங்களுக்கு பேரிடர் நிதி ஒதுக்காதது, பள்ளிக் கல்விக்கு தமிழகத்துக்கு ஒதுக்காதது, கொடிய நீட் தேர்வால் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

பிஜேபி ஆட்சியில்லாத மாநிலங்களில் ஆளுநர்களைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அழுத்தம் கொடுப்பது, சென்னை மெட்ரோ 2-ம் கட்ட நிதியை தாமதப்படுத்துவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மகாத்மா காந்தியின் பெயரில் இருப்பதால் அதைத் தடுக்க முயற்சிப்பது. இதன்மூலம், கிராமப்புற மக்களின் வாழ்க்கையுடன் மத்திய அரசு விளையாடி வருகிறது.
4,034 கோடி தமிழகத்திற்கு பாக்கி உள்ளது. இதுபோன்ற காரணங்களால், ஏப்., 6-ல், பிரதமர் மோடி தமிழகம் வருவதை கண்டித்து, தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், மாவட்ட தலைவர்கள் மற்றும் என் தலைமையில், சென்னையில், அரசு பதாகையின் கீழ், போராட்டம் நடத்தப்படும்,” என்றார்.