சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், தேர்தல் நிலவரத்தை கண்காணிக்க அம்மாநிலத்தில் காங்கிரஸ் கமிட்டி அமைத்துள்ளது.
இந்தக் குழுவில் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், கட்சியின் பொருளாளர் அஜய்மக்கான், பஞ்சாப் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தற்போது ஹரியானாவில் நயாப் சிங் சைனி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.
90 சட்டமன்ற தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் சமீபத்தில் வெளியிட்டது. மீதமுள்ள 1 இடம் சிபிஐ(எம்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 28 சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது.
தேர்தல் முடிவுகள் அக்டோபர் 8-ம் தேதி அறிவிக்கப்படும்.