சென்னை : பெண்களைத் தொடர்ந்து அநாகரிகமாகவும் தரக்குறைவாகவும் பேசி வரும் பாலியல் குற்றவாளி சீமான் மீது தமிழக அரசு ஊழிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
பாலியல் குற்றவாளி சீமான் தொடர்ந்து பெண்களை அநாகரிகமாகவும், தரக்குறைவாகவும் பேசுவதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சாடியுள்ளார். அவருடைய கட்சியில் பெண்களை மதிப்பவர்கள் இருந்தால், உடனே வெளியேறவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தன்னை என்ன செய்ய முடியும் என்ற ஆணவத்தில் சட்டத்திற்கு சவால் விட்டுக்கொண்டுள்ள அவர் மீது முதல்வர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.