சென்னை: தமிழக பா.ஜ.க., முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று அளித்த பேட்டி:- காஷ்மீரில் நடந்த தாக்குதலால், அனைவரும் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளோம். நேற்று முன்தினம் என் தந்தையின் ஆன்மா சாந்தியடைய வேண்டி காசி சென்றேன். அப்போது இறந்தவர்களுக்காக நானும் பிரார்த்தனை செய்தேன். இந்த நேரத்தில் பிரதமர் மோடியை ஆதரிக்க வேண்டும். இந்தச் சம்பவம் குறித்து விமர்சனக் கருத்துக்களை தெரிவித்தால், அவர்கள் தேசவிரோதமாக கருதப்பட வேண்டும்.

விமர்சிப்பவர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. நாட்டுக்காக மற்ற கட்சிகளும் பாஜகவுடன் கைகோர்த்திருப்பது நல்லது, ஆறுதல் அளிக்கிறது. தமிழக வெற்றிக் கட்சியின் பூத் கமிட்டி கருத்தரங்கு கோவையில் நடந்தது. தம்பி விஜய் களம் இறங்கியதில் மகிழ்ச்சி. வொர்க் ப்ரோம் ஃபீல்டுல இருந்து வீடியோ கான்ஃபரன்ஸ்ல இருந்து வொர்க் ப்ரோம் ஃபீல்டுக்கு வந்ததில் மகிழ்ச்சி.
இன்னொரு வேண்டுகோள். வாக்களிக்காத வயதிலும் பலர் இருந்ததால், குழந்தைகள் அணியைத் தவிர்க்க வேண்டும். விஜய்க்கு பிறகு கட்சியில் உள்ள குழந்தைகள் படிப்பை நிறுத்தக்கூடாது. 2026-ல் எந்தக் களமாக இருந்தாலும், மத்தியில் வலுவாக ஆட்சி செய்யும் பா.ஜ.க.வும், இதற்கு முன் தமிழகத்தை ஆண்ட அதிமுகவும் கூட்டணி அமைத்து போட்டியிடும். இவ்வாறு அவர் கூறினார்.