சென்னை: விளம்பர மோகத்திலிருந்து வெளியே வாருங்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தியுள்ளார்.
பாலியல் வன்கொடுமை சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதுடன், அதற்கு காரணமான கஞ்சா போன்ற போதை வஸ்துகளை ஒழிக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
விளம்பர மோகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் வெளியே வர வேண்டும் என சாடிய அவர், அப்பா.. அப்பா.. என யாரோ எழுதித் தந்ததை ஒப்புவிக்காமல், சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தினால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என யோசனை கூறினார்.