சென்னை : போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து ஊழியர்களை, அரசு ஊழியர்களாக அறிவிப்பது குறித்து ஆலோசித்து முடிவு தெரிவிக்கப்படும். என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். போக்குவரத்து ஊழியர்களின் 15வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 2ஆம் கட்ட பேச்சு நேற்று நடந்தது.
அதன்பின் பேசிய அவர், கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்றார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச்சென்று, எவற்றை நிறைவேற்ற முடியுமோ, அவற்றை நிறைவேற்றுவோம் என்றும் உறுதியளித்தார். இதனால் போக்குவரத்து ஊழியர்கள் அரசு ஊழியர்களாக நடவடிக்கை எடுக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.