டெல்லி: டெல்லி பெண்களுக்கு மாதம் ரூ.2500 மற்றும் 500 ரூபாய்க்கு சிலிண்டர் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் நிலையில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளது. பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மும்முரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன
ஏற்கனவே பாஜக, ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கை வெளியாகிவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் மாதந்தோறும் பெண்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும். 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.
500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். ரூ. 25 லட்சம் வரை இலவச சுகாதார காப்பீடு. இலவச ரேசன் பொருட்கள் (5 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை, ஒரு கிலோ சமையல் எண்ணெய், 6 கிலோ பருப்பு, 250 தேயிலை) வழங்கப்படும்.
படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு ஒரு வருடத்திற்கு மாதம் 8,500 ரூபாய் என்ற வகையில் நிதி உதவி வழங்கப்படும். மாநிலம் முழுவதும் 100 இந்திரா கேன்டீன் தொடங்கப்பட்டு, 5 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.