புதுடெல்லி: மக்களவை சபாநாயகராக 2-வது முறையாக நேற்று பதவியேற்ற ஓம் பிர்லா, எமர்ஜென்சி பிரகடனத்தின் 50-வது ஆண்டு நிறைவையொட்டி மக்களவையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அவசர நிலை பிரகடனம் அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல் என்று பிர்லா கூறினார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று ஓம் பிர்லாவை சந்தித்து பேசினார். இந்த கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி செயல்படுவார் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். இதையடுத்து அகில இந்திய கட்சி தலைவர் ஓம் பிர்லாவை ராகுல் காந்தி மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.
அப்போது நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். லோக்சபாவில் பேசியபோது எமர்ஜென்சி குறித்த கருத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று ஓம் பிர்லாவிடம் ராகுல் காந்தி கூறினார்.
அது தவிர்க்கப்பட வேண்டிய அரசியல் கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.