சென்னை: திமுகவில் இணைந்த திவ்யா சத்யராஜுக்கு தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு:- திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு தலைவர் டி.பி.எம். மைதீன்கான், சிறுபான்மையினர் நல உரிமைகள் பிரிவு துணைத் தலைவராகப் பணியாற்றி வரும் வி.ஜோசப் ராஜ், சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணைச் செயலர் கே.அன்வர் அலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை செல்வராஜ் மறைவு காரணமாக, திமுக செய்தித் தொடர்பாளராக சூர்யா கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளராக தமிழ் பொன்னிக்கு பதிலாக திவ்யா சத்யராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். திவ்யா சத்யராஜ் கடந்த மாதம் திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.