சென்னை: வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கும், 36 தொகுதிகளும் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் காங்கிரஸ் கட்சி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், இந்த முறை கூடுதல் இடங்களை உறுதியாக கோருகிறது. கூட்டணி ஆட்சி என்ற விஷயத்திலும் காங்கிரஸ் தளர்வில்லாமல் பேசுகிறது.
காங்கிரஸ் தரப்பில் 35 தொகுதிகள் வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகவும், அதற்கு திமுக மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 25 தொகுதிகளுக்கு மேலாக 2 அல்லது 3 தொகுதிகள் மட்டுமே கூடுதலாக ஒதுக்க முடியும் என திமுக சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழு குறித்த அறிவிப்பு நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழு அனைத்து கூட்டணி கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு தொடர்பாக தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.