சென்னை : திமுகவில் அடுத்தடுத்து நிர்வாகிகள் களையெடுப்பு பணி நடந்து வருகிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திமுகவில் இவ்வாறு களையெடுக்கும் பணி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
திமுகவில் முக்கிய மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், சட்டசபை தேர்தலை முன்வைத்து இந்த மாற்றங்கள் நடப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்னும் சில அறிவிப்புகளையும் தொண்டர்கள் எதிர்பார்க்கக்கூடும் என்றும் கூறியிருந்தார். ஏற்கெனவே, மூத்த நிர்வாகிகள் நீக்கப்பட்டு, கட்சியில் புதிதாக வந்தவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு உடனடியாக மாவட்ட செயலாளர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் சட்டப்பேரவை தேர்தலுக்காக இப்போதே திமுக தயாராகி வருகிறது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.