தஞ்சாவூர்: தவெக திமுக இடையே தான் போட்டி என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான் தவெக தலைவரின் நிலை வெல்ல போவது திமுக தான் இரண்டாம் இடத்திற்கு தான் பாஜக தவெக இடையே போட்டி உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் பூதலூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா முன்னிட்டு மாட்டு வண்டி குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் சின்ன மாடு , பெரிய மாடு என மாட்டுவண்டி பந்தயமும் குதிரை வண்டி பந்தயமும் நடைபெற்றது. இப் போட்டியினை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் குதிரைகள் கலந்து கொண்டன. முதல் நான்கு இடத்தைப் பிடித்த மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. போட்டியை தொடங்கி வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கோவி செழியன் கூறியதாவது:
தமிழக வெற்றி கழகம் திராவிட முன்னேற்ற கழகம் இடையே தான் போட்டி என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான் தவெக தலைவரின் நிலை , யாரு யாருக்காக போட்டியாக இருந்தாலும் வெல்லப்போவது திராவிட முன்னேற்ற கழகம் தான் முதலிடம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இரண்டாம் யாருக்கு என்பதுதான் பாரதிய ஜனதா கட்சி தமிழக வெற்றி கழகம் கட்சிகளுக்குள் இருக்கிற போட்டி திமுக வெல்லுவது உறுதி மீண்டும் தமிழகத்தை ஸ்டாலின் ஆளுவது உறுதி என தெரிவித்தார்.