சென்னை: திமுக செயற்குழு கூட்டம் வரும் 22-ம் தேதி திமுக தலைவரும், முதல்வருமான மு.க., ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட திமுக செயற்குழு கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வரும் 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும். அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். முன்னதாக அனுப்பிய அழைப்புக் கடிதத்தை தவறாமல் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.