ஆந்திரா : தமிழ் படங்களை ஹிந்தியில் டப் செய்ய வேண்டாம் என்று ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். எதற்காக தெரியுங்களா?
தமிழ்நாட்டின் ஹிந்தி எதிர்ப்பை பவன் கல்யாண் விமர்சித்துள்ளார். தமிழ் படங்களை ஏன் ஹிந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள் என கேள்வி எழுப்பிய அவர், வடமாநிலங்களின் காசு மட்டும் வேண்டும், ஆனால் அவர்களின் மொழி வேண்டாமா எனவும் அவர் வினவியுள்ளார்.
ஒரு மொழிக்கு எதிராக ஏன் பாரபட்சம் காட்டப்படுகிறது எனவும், சமஸ்கிருதமும், ஹிந்தியும் நமது தேசத்தின் மொழிகள் அல்லவா எனவும் தெரிவித்துள்ளார்.
ஆந்திர முதல்வர் பவன் கல்யாணின் இந்த கருத்துக்கு தமிழகம் மற்றும் இன்றி பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. மும் மொழிக் கொள்கையை தொடர்ந்து தமிழகம் எதிர்த்து வருகிறது. இந்நிலையில் பவன் கல்யாணி இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.