திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஏற்குடி அச்சம்பத்தில் நேற்று திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறுகையில், “அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து காரணமாக நாங்கள் அனைவரும் வேதனையிலும் அதிர்ச்சியிலும் இருக்கிறோம்.

அதிமுக-பாஜக கூட்டணி பற்றி எங்கள் பொதுச் செயலாளரிடம் கேளுங்கள். என்னிடம் கேட்காதீர்கள். கூட்டணி பற்றி எங்களிடம் கேட்டு குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள். எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவிடம் பேசியதையும் கூட்டணி பற்றியும் தெளிவாகக் கூறியுள்ளார். அதிமுக ஆட்சிக் காலத்தில் நாங்கள் மக்களுக்கு என்ன செய்தோம் என்பது மக்களுக்குத் தெரியும்” என்றார்.