புதுக்கோட்டையில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டி:- அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பாராட்டு விழாவுக்கு ஜெயலலிதா படமோ, எம்ஜிஆரோ படம் இடம்பெறாததால் ஜெயலலிதா ஆதரவாளர் என்ற முறையில் செங்கோட்டையன் செல்லவில்லை என்றார்.
எம்ஜிஆர் கட்சி தொடங்கிய காலத்திலிருந்தே செங்கோட்டையன் கட்சியில் இருந்து வருகிறார். அவருடைய கருத்தில் நானும் உடன்படுகிறேன். தன்னைக் காத்துக் கொள்ள அ.தி.மு.க.வைக் கவசமாகப் பயன்படுத்துகிறார் எடப்பாடி. இதே நிலை நீடித்தால் 2026 தேர்தலுக்கு பிறகு அதிமுகவுக்கு மூடுவிழா நடத்துவார். பெரியார் போன்ற தலைவர்களை சீமான் இழிவாக பேசுவது வெட்கக்கேடானது. ஆளுநரின் அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.