எகிப்து: நான்கு பிணைக்கைதிகளை விடுவிக்க 2 நாள் காசா போர் நிறுத்தத்திற்கு எகிப்து பரிந்துரை செய்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையில் போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அதேவேளையில் ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றவர்களை மீட்கும் வரை தாக்குதல் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
எகிப்து இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட மத்தியஸ்தரகாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒருவாரம் போர் நிறுத்தம் ஏற்பட்டது 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை விடுவிக்கப்பட்டனர்.
அதன்பின் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. தற்போது வரை சுமார் 100 பிணைக்கைதிகள் ஹமாஸிடம் உள்ளனர். கடந்த வாரம் இஸ்ரேல்-காசா இடையே போர் நிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் நான்கு பிணைக்கைதிகைள திரும்பப் பெறுவதற்கான போர் நிறுத்தத்தை எகிப்து பரிந்துரை செய்துள்ளது. நான்கு பிணைக்கைதிகளை திரும்பப் பெற இரண்டு நாட்கள் போர் நிறுத்தத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த தகவலை எகிப்பு அதிபர் அப்தெல்-ஃபத்தா-எல்-சிசி தெரிவித்துள்ளார்.
நான்கு பிணைக்கைதிகளுக்காக இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும். இரு தரப்பிலும் இந்த பரிந்துரை ஏற்கப்பட்டால் நான்கு பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்.