சென்னை: HMPV தொற்று குறித்து சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டசபையில் பேசும் போது அவர் கூறியதாவது: HMPV தொற்று 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறிப்பட்ட வைரஸ். குளிர்காலத்தில் பரவக்கூடிய வைரஸ், இதன் பாதிப்பு 6 நாட்கள் வரை உள்ளது.
தமிழகத்தில் HMPV வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் நலமுடன் உள்ளனர். HMPV தொற்று குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.