சென்னை: தமிழகத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு பத்து நாள் பயணம் மேற்கொள்ள இருப்பதாக, சென்னை நீலாங்கரையில், திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ இல்லத் திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகத்தில் இதுவரை 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் திரட்டப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பீகாரில் சிறப்பு வாக்காளர் திருத்தத்தின்போது ஏற்பட்ட குளறுபடிகள் போல், தமிழ்நாட்டிலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக விழிப்புணர்வுடன் அனைத்து முயற்சியையும் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். லண்டன் பயணத்தின் போது, புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பெரியாரின் உருவப் படத்தை திருந்துவைக்க இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.