சென்னை: புற்றுநோயியல் நிபுணரான மைத்ரேயன், ஆர்எஸ்எஸ் உறுப்பினராக பொது வாழ்க்கையைத் தொடங்கினார். 1991-ல் பா.ஜ.க.வின் தமிழ்நாடு கிளையின் செயற்குழு உறுப்பினரானார்.
1995 முதல் 1997 வரை பா.ஜ.க. தமிழ்நாடு பொதுச் செயலாளராகவும், 1997 முதல் 1999 வரை துணைத் தலைவராகவும், 1999 முதல் 2000 வரை மாநிலத் தலைவராகவும் பணியாற்றினார்.
பின்னர் 2000-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். 2001 சட்டப் பேரவைத் தேர்தலில், மயிலாப்பூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், 2002-ம் ஆண்டு முதல் 3 முறை எம்.பி.யாக நியமிக்கப்பட்டார்.
ஜெயலலிதா இருந்தவரை அவரது ஆசியுடன் கட்சியில் பெரும் செல்வாக்குடன் பயணித்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017-ல் ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது ஓபிஎஸ் அணியில் இருந்தார். கட்சியில் தனி தலைமை சர்ச்சை எழுந்தபோது, பழனிசாமி அக்கட்சியில் இணைந்தார்.
பின்னர் ஓபிஎஸ் அணிக்கு திரும்பினார். 23 ஆண்டுகள் அதிமுகவில் இருந்த அவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாஜகவில் இணைந்தார். ஓராண்டு பயணத்திற்கு பிறகு சென்னையில் நேற்று திடீரென பழனிசாமியை சந்தித்தார்.
இந்நிலையில், அ.தி.மு.க., தலைமையகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முன்னாள் எம்.பி., பொதுச்செயலாளர் பழனிசாமியை, அ.தி.மு.க.,வில் சேருமாறு, மைத்ரேயன் கடிதம் அளித்தார். அதை பரிசீலித்து, மைத்ரேயன் கட்சியில் சேர்க்கப்பட்டார்.