சென்னை: சென்னை விமான நிலையம், கிளாம்பாக்கம் இடையே ரூ.9335 கோடியில் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் நடைபெறும்.
கோயம்பேடு – பட்டாபிராம், பூந்தமல்லி – ஸ்ரீபெரும்புதூர் இடையே மெட்ரோ ரயில் சேவை உருவாக்கப்படும். சென்னை கிண்டியில் மெட்ரோ, பேருந்து, ரயில் போக்குவரத்தை இணைக்க ரு.50 கோடியில் பன்முக மையம்
பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் தடம் வரும் டிசம்பரில் செயல்பாட்டுக்கு வரும். உதகை, கொடைக்கானலில் ரோப் வே திட்டத்தை ஏற்படுத்தவும் ஆய்வு.
போக்குவரத்துத் துறைக்கு ரூ.12,964 கோடி ஒதுக்கீடு. போக்குவரத்துத் துறையில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு. ரூ.1 கோடியில் வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி மையம். 6 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற முயற்சி.
கடல்சார் வள அறக்கட்டளை – ரூ.50 கோடி ஒதுக்கீடு 4,000 மெகாவாட் திறன் கொண்ட மின்கலன் சேமிப்பு அமைப்புகள் போன்ற அறிவிப்புகளும் இடம் பெற்றுள்ளது.