சென்னை: பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து உறுப்பினர் சேர்க்கை பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.
தமிழக பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் எச்.ராஜா தமிழகம் முழுவதும் பாஜகவின் 65 மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தமிழக பாஜக அலுவலகச் செயலர் எம்.சந்திரன் அறிவித்துள்ளார்.
அதன்படி அவரது சுற்றுப்பயணம் செங்கல்பட்டில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து, இன்றும், செப்டம்பர் 26, 27-ம் தேதிகளில் சென்னையில் ஆய்வு நடத்துகிறார்.
அதன்பின், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அக்.,17-ல் கோவை, நீலகிரியில் சுற்றுப்பயணத்தை முடிக்கிறார். அக்கட்சியின் விளையாட்டு மற்றும் திறமை மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி. சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைப்பாளராக வளர்ச்சி பிரிவு நியமிக்கப்பட்டுள்ளது.