சிவகங்கை: காஷ்மீர் தாக்குதலைக் கண்டித்து பாஜக சார்பில் சிவகங்கையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் எச். ராஜா பங்கேற்றார். அப்போது அவர் அளித்த பேட்டி:- நீட் தேர்வு எழுத வந்த பெண்ணிடம் தனது தாயத்தை கழற்றச் சொன்னது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதற்குப் பொறுப்பான அதிகாரியை அவரது பதவியில் இருந்து நீக்க வேண்டும். கார் விபத்து குறித்து மதுரை ஆதீனம் சொல்வதை நான் நம்புகிறேன்.
காவல்துறை சொல்வதை நான் நம்பவில்லை. கூட்டணி, தொகுதிகளின் எண்ணிக்கை, அது கூட்டணி ஆட்சியாக இருக்குமா என்பதை பாஜக தலைமை முடிவு செய்யும். நடிகராக இருப்பதற்காக ஒரு கூட்டம் அரசியலில் வெற்றியைத் தருமா என்று சொல்ல முடியாது. அவர் இவ்வாறு கூறினார்.

கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும். எல்லாவற்றையும் அவர்கள்தான் முடிவு செய்வார்கள் என்று கூறி வரும் நிலையில், கூட்டணி ஆட்சி குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும் என்று எச். ராஜா கூறியது அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.