புதுடெல்லி: ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால் நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார்.
அப்போது, சட்டப் பேரவைத் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபைக்கு எப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய கூட்டணியின் தேர்தல் பிரசாரமாக இருந்தாலும் சரி, தொகுதி பங்கீடுகளாக இருந்தாலும் சரி, முன்கூட்டியே தேர்தல் வியூகத்தை திட்டமிடுவது அவசியம்.
ஆர்ஜேடி தவிர, காங்கிரஸ் இரண்டாவது பெரிய கூட்டணி கட்சியாகும். எனவே, தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 2019-ம் ஆண்டைப் போல் அல்லாமல், இந்தத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணியில் இடம் பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. கலந்தாய்வும் தொடங்கியுள்ளது.
இம்முறை அதிக இடங்களில் போட்டியிட உரிமை கோருவோம். இவ்வாறு தலைவர் கூறினார்.