புதுடில்லி: பயங்கரவாதத்தை எதிர்கொள்ள விரைவில் தேசிய தீவிரவாத எதிர்ப்புக் கொள்கை கொண்டுவரப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் எல்லைகளற்றதாகவும், கண்ணுக்கு தெரியாததாகவும் மாறியுள்ளதாகவும், அதனை எதிர்கொள்ள விரைவில் தேசிய தீவிரவாத எதிர்ப்புக்கொள்கை கொண்டுவரப்படும் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
டெல்லியில் தேசிய புலனாய்வு முகமை ஏற்பாடு செய்த மாநாட்டில் பேசிய அவர், வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை திறம்பட எதிர்த்துப் போராட மேம்பட்ட தொழில்நுட்பத்தின் தேவை உள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், இளம் அதிகாரிகள் மிக உயர்ந்த தொழில்நுட்ப அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும் அதற்கான பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் அமித் ஷா அறிவுறுத்தினார்.