சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் சீமானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நடிகை விஜயலட்சுமி குறித்து சீமான் கூறிய கருத்து வைரலாகி வருகிறது. இதுகுறித்து கனிமொழி எம்.பி.யிடம் நேற்று செய்தியாளர்கள் கேட்டபோது, “சீமான் வீட்டில் உள்ள பெண்களும், நாம் தமிழர் கட்சி பெண்களும் அவருடைய கருத்து குறித்து கேள்வி கேட்க வேண்டும்.
இதைவிட பெண்களை இழிவாகப் பேச முடியாது. “அவரது வீட்டிலும், கட்சியிலும் இருக்கும் பெண்கள் இதை எப்படி சகித்துக்கொண்டும் பொறுத்துக்கொண்டும் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை” என்று பதிலளித்தார். இதனிடையே, தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி சையத் அஜீனா நேற்று வெளியிட்ட அறிக்கையில், “பெண்களை மகாலட்சுமியாகக் கருதும் தமிழகத்தில் தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தி, ‘நாம் தமிழர்கள்’ என்று கூறி தமிழ்ப் பெண்களையும், கலாச்சாரத்தையும் சீரழிக்கும் வகையில் பேசிய சீமானுக்கு தமிழக மகளிர் காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது.
வயது பெண்களை உட்கார வைத்து காக்கும் தமிழ் கலாச்சாரத்தை கேவலமாக பேசி வரும் சீமானை கண்டித்து தமிழக மகளிர் காங்கிரஸ் சார்பில் அதே தென்னை மரத்தில் செய்த துடைப்பத்தால் சீமானை அடிக்க தமிழக மகளிர் காங்கிரஸ் தயாராக உள்ளது. அவரை தமிழகத்தை விட்டு விரட்ட தமிழக பெண்கள் திரள வேண்டும்” என்றார்.