காஞ்சிபுரம்: சொத்து வரி உயர்வை கண்டித்து காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் இன்று (அக்.8) மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
சொத்துவரி மற்றும் மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து காஞ்சிபுரத்தில் பழைய மாநகராட்சி அலுவலகம், காஞ்சிபுரம் காந்தி சாலை உள்ளிட்ட 4 இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதேபோல் உத்தரமேரூர் பேரூராட்சி, வாலாஜாபாத் பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த மனித சங்கிலி போராட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், மாநில அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, காஞ்சிபுரம் நகராட்சி முன்னாள் தலைவர் ஆர்.டி.சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.