வாஷிங்டன்: மிகவும் திறமையான தொழிலாளர்கள் நாட்டிற்குள் நுழைய உதவும் சிறப்பு விசா திட்டத்தை நான் ஆதரிக்கிறேன். நான் எப்பொழுதும்எச்1-பி விசாக்களை விரும்புகிறேன். நான் எப்போதும் விசாக்களுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் வருகிற ஜனவரி 20-ந்தேதி பதவியேற்க உள்ளார். அவர் தனது ஆட்சியில் குடியேற்றம் தொடர்பாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனால் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்1-பி விசாவுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில் டிரம்ப் கூறும்போது, மிகவும் திறமையான தொழிலாளர்கள் நாட்டிற்குள் நுழைய உதவும் சிறப்பு விசா திட்டத்தை நான் ஆதரிக்கிறேன். நான் எப்பொழுதும்எச்1-பி விசாக்களை விரும்புகிறேன். நான் எப்போதும் விசாக்களுக்கு ஆதரவாக இருக்கிறேன். அதனால்தான் நாங்கள் அவற்றை வைத்திருக்கிறோம் என்றார்.
டிரம்பின் ஆதரவாளரும், அவரது ஆட்சி நிர்வாகத்தில் உயர் பதவி அளிக்கப்பட்டுள்ள எலான் மஸ்க் சமீபத்தில் கூறும்போது, வெளிநாட்டில் இருந்து உயர் பொறியியல் திறமைகளை கவர்வது அமெரிக்கா வெற்றி பெறுவதற்கு அவசியம் என்று கூறியிருந்தார்.