சென்னை : பாமகவும் சர்ச்சையும் ஓயவே ஓயாது போல் உள்ளது. பாமகவுக்கு நானே தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாமகவுக்கு தாமே தலைவராக தொடர்வதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கட்சி விதிப்படி பொதுக்குழுதான் தம்மை 2022இல் தலைவராக தேர்ந்தெடுத்ததாகவும், அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருப்பதாகவும், ஆதலால் தலைவராக தாம் தொடர்ந்து செயல்படுவேன் என அன்புமணி கூறியுள்ளார்.
2026 தேர்தலில் வலிமையான கூட்டணியை அமைக்க வேண்டியது தமது கடமை என்றும், அது தமது தலையாய பணியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாமக தலைவர் நான் மட்டுமே அன்புமணி நீக்கி உள்ளேன் என ராமதாஸ் அறிக்கை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.