வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடியில் தி.மு.க., வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:- தேர்தல் எப்படி நடத்தப்படுகிறது, எப்படி வியூகம் வகுக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். என்னை யாரும் ஏமாற்ற முடியாது.
ஒருமுறை நான் ஏமாந்து போனேன். இது கோவிட் சமயத்தில் நடந்தது. அப்போது வேகமாக வந்து செல்ல முடியவில்லை. இல்லை என்றால் கண்ணில் விரலை விட்டு ஆட்டி இருப்பேன். சிலர் எனக்கு எதிராக துரோகம் செய்தனர். அப்படிப்பட்டவர்களை களையெடுத்து தேர்தலை வெற்றிகரமாக நடத்தும் வல்லமை துரைமுருகனுக்கு உண்டு.
நான் யாரையும் மன்னிப்பேன். கட்சிக்கு துரோகம் செய்பவர்களை மன்னிக்க மாட்டேன். என்னைக் கொல்லும் நிலை வந்தாலும் மன்னிப்பேன். ஏனென்றால் 60, 70 ஆண்டுகள் திமுகவை வளர்த்தவன் நான். எனவே இது எனது கட்சி, எங்கள் கட்சி என்று சொல்பவன் நான். இவ்வாறு துரைமுருகன் பேசினார்.