கோவை: இந்தியாவின் பிற மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைப்பது போல தமிழ்நாட்டிலும் கூட்டணி அரசு அமைப்போம் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- டெல்லியில் உள்ள தலைவர்கள் கூட்டணி அரசை கவனித்துக்கொள்வார்கள்.

இந்தியாவின் பிற மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைப்பது போல தமிழ்நாட்டிலும் கூட்டணி அரசு அமைப்போம். அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. டாஸ்மாக்கை கட்டுப்படுத்த எங்களிடம் ஒரு திட்டம் உள்ளது. எங்களுக்கு வாக்களியுங்கள்.
ஆட்சிக்கு வந்த பிறகு அதை நாங்கள் உங்களுக்குச் சொல்வோம். எங்கள் கூட்டணி உடையாது. நான் உங்களுக்கு பிரேக்கிங் நியூஸ் தர மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.