திருவனந்தபுரம்: ”காங்கிரஸ் கட்சிக்கு எனது சேவை தேவையில்லை என்றால், எனக்கு வேறு பல வாய்ப்புகள் உள்ளன,” என, கட்சி தலைமையிடம், சசி தரூர் எம்.பி. கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த சசி தரூர் எம்.பி., காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், 4-வது முறையாக எம்.பி.யாகவும் பதவி வகித்து வருகிறார். மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் அவ்வப்போது பாராட்டி வருகிறார். சமீபத்தில், அமெரிக்காவில் அதிபர் டிரம்பை சந்தித்ததற்காக பிரதமர் மோடியை பாராட்டியிருந்தார்.
இது காங்கிரஸ் தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசை பாராட்டி கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இந்நிலையில் மலையாளத்தில் ‘வர்த்தமனம்’ என்ற போட்காஸ்ட் வீடியோ நாளை வெளியாக உள்ளது. இதன் டீசர் ஏற்கனவே வெளியாகியுள்ளது. அதில் சசி தரூர் கூறியிருப்பதாவது:- காங்கிரஸ் கட்சிக்கு நான் தேவையில்லை என்றால், எனக்கு வேறு பல வாய்ப்புகள் உள்ளன.
நான் அமெரிக்காவில் மகிழ்ச்சியாக இருந்தேன், நான் நிறைய சம்பாதிக்கிறேன். ஆனால், நாட்டுக்கு சேவை செய்யவே இங்கு வந்தேன். கேரளாவின் வளர்ச்சியை பாராட்டுகிறேன். எனது கருத்து சுதந்திரத்தை மக்கள் பாராட்டுகிறார்கள். நான் தேவை என்று கருதி கட்சியிலேயே இருப்பேன். இல்லையெனில், எனக்கு வேறு வழிகள் உள்ளன. எனக்கு வேறு வழியில்லை என்று நீங்கள் நினைக்க வேண்டாம். என்னிடம் புத்தகங்கள் உள்ளன. நான் பல்வேறு நிகழ்வுகளில் பேசுகிறேன், உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகளில் பேச எனக்கு அழைப்புகள் வருகின்றன.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஆனால், மாநிலங்களவைத் தேர்தலில் அது எதிரொலிக்கவில்லை. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு 19 சதவீத வாக்குகள் மட்டுமே உள்ளன. அதை வைத்து மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது. 26-27 சதவீத வாக்குகளைப் பெற்றால்தான் ஆட்சி அமைக்க முடியும். கடந்த 2 லோக்சபா தேர்தல்களில் எங்களுக்கு ஆதரவளிக்காதவர்களின் ஓட்டுகளை பெற வேண்டும். இவ்வாறு சசி தரூர் கூறினார்.