மதுரை: மதுரை மேற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் நேற்று அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைக்கலாம். அதெல்லாம் தேர்தல் உத்தி. ஊடகங்கள் கற்பனையான உரையாடல்களை எழுதுகின்றன.

எடப்பாடி – மோடி சந்திப்பு பற்றி எழுதும் போது ஊடகங்கள் நம்மைப் பற்றிய கற்பனை உலகிற்குள் செல்கின்றன. எங்கம்மா எட்டடி பாய்ந்தால் எடப்பாடி 16 அடி குதிப்பார். ஜெயலலிதா சிங்கம் என்றால், அவர் வழியில் வந்த சிங்கம் எடப்பாடி. கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளரிடம் கேளுங்கள்.
பாமக பிரச்சினை குடும்ப விவகாரம். அதைப் பற்றி பேசாதே. அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜக தலைமையிடம் எடப்பாடி சொல்லவில்லை. வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையில் நிச்சயம் ஆட்சி அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.