புதுடெல்லி: டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் ஆட்சியை பிடிப்பது யார் என்ற போட்டி நிலவுகிறது. வரும் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.
இதற்கிடையில், பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகளை 2 பகுதிகளாக ஏற்கனவே வெளியிட்டது. இந்நிலையில் நேற்று 3-வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தேர்தல் வாக்குறுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் 3 ஆண்டுகளுக்குள் யமுனை நதியை சுத்தம் செய்வோம். யமுனை நதியை சுத்தப்படுத்தி லண்டன் தேம்ஸ் நதி போல் ஆக்கப்படும். டெல்லி மக்கள் முன்னிலையில் யமுனையில் நீராடுவேன். டெல்லிக்கு சுத்தமான குடிநீர் வழங்கினால் டெல்லி மாசு இல்லாத நகரமாக மாறும். இவ்வாறு மத்திய அமைச்சர் அமித்ஷா கூறினார்.