திருமலை: ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் முறையான சாலை வசதி இல்லை. இதனால், அவசர காலங்களில் நோயாளிகளை டோலியில் ஏற்றிச் செல்லும் நிலை பரிதாபமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சட்டசபை தேர்தல் வாக்குறுதியில், துணை முதல்வர் பவன் கல்யாண், மலைக்கிராமங்களில் சாலைகள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் பார்வதிபுரம் மன்யம் தாலுகாவில் உள்ள பழங்குடியினர் கிராமங்களில் சாலைப்பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது. இதற்காக துணை முதல்வர் பவன் கல்யாண் பழங்குடியினர் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் கும்மிடி சந்தியாராணியுடன் மழையில் நனைந்தபடி பாகுகுஜோலா கிராமத்திற்கு நடந்து சென்றார்.
அப்போது துணை முதல்வர், “என்னுடைய வேலையை செய்ய விடுங்கள். எனக்கு கீழ் உள்ள அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை எப்படி வேலைக்கு அமர்த்துவது என்பது எனக்குத் தெரியும். அவர்களை அவர்களின் வேலையைச் செய்ய வைப்பேன். இளைஞர்களும் கேள்வி கேட்க வேண்டும், சாலைகள் போடப்படுகிறதா? ஒரு அரசு திட்டத்தில் ஏதேனும் முறைகேடுகள் இருந்தால், அவர்கள் கேள்விகள் கேட்கப்படாவிட்டால், யாரும் எதையும் மாற்ற முடியாது.