தஞ்சாவூர்: தகுதியும் திறமையும் இல்லாதவருக்கு தஞ்சை மாநகர தலைவர் பதவியா? என்று எதிர்ப்பை கிளப்பிய தஞ்சாவூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியினர்.
தஞ்சாவூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சிக்கு அண்மையில் மாவட்ட தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமைக்கும் கோரிக்கையை அனுப்பி உள்ளனர்
இது தொடர்பாக தஞ்சாவூரில் இன்று இளைஞர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜமால் முகமது யூனூஸ் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வயலூர் ராமநாதன் மாநில வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் ஜான்சன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜமால் முகமது யூனூஸ் அகில இந்திய தலைமை மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அண்மையில் மாவட்ட தலைவர் பொறுப்பு அறிவிக்கப்பட்டது. இதில் தஞ்சாவூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக எம். மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட தலைவராக நியமிக்கப்படுபவருக்கு உரிய தகுதியும் தலைமை பண்புக்கான ஆளுமையும் இல்லை. நாங்கள் எல்லாம் எங்களது சொந்த நிதியை கொண்டு காங்கிரஸ் கட்சியை இவ்வளவு காலம் வளர்த்து வந்தோம். இப்போது திடீரென ஒருவரை மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் அவருக்கு பொருளாதார ரீதியாக பலம் ஏதும் இல்லை. காங்கிரஸ் கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் எங்களது நிர்வாகிகளின் ஒட்டுமொத்த கோரிக்கை.
ஆனாலும் மாநகர மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளின் கருத்துக்களை ஏதும் உள்வாங்கிக் கொள்ளாமல் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார் எனவே அவரை மாற்ற அகில இந்திய தலைமையும் தமிழக தலைமையும் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாங்கள் எங்களது கோரிக்கையை மனுவாக இமெயில் மூலம் அனுப்பி உள்ளோம். எங்களது கோரிக்கையை ஏற்கும் வரை நாங்கள் புதிய மாவட்ட தலைவரை ஏற்றுக்கொள்ள மாட்டோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்