By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஹெஸ்புல்லா நிலைகளை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல்
    0 Min Read
    ரூ.100 கோடி மதிப்பிலான 250 கிலோ கொக்கைன் கடத்தி வந்த 6 பேர் கைது
    1 Min Read
    உயிருடன்தான் இருக்கிறேன்… மீண்டும் வீடியோ வெளியிட்ட நெதன்யாகு
    1 Min Read
    துருக்கியில் சக்திவாய்ந்த நில நடுக்கம்
    1 Min Read
    ஈரான் புதிய தலைவர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.92 கோடி பரிசு என அறிவிப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    விமானங்களில் குறைந்தது 60 சதவீத இருக்கைகளுக்கு சீட் தேர்வு கட்டணம் கூடாது என்று டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.
    1 Min Read
    மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு உதவ சாக்‌ஷம் செயலி அறிமுகம்
    1 Min Read
    ரீல்ஸ் எடுக்கும் போது விபரீதம்… துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு வாலிபர் பலி
    1 Min Read
    அனைத்து வீட்டு உபயோக எல்.பி.ஜி. பயனர்களுக்கும் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு
    2 Min Read
    சிறுநீரகம் சிறப்பாக இயங்க நீங்கள் செய்ய வேண்டியது இதைதான்!!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அதிகமாக முட்டைகோஸ் சாப்பிடுகிறீர்களா… கவனம் தேவை
    2 Min Read
    மழைக்காலத்தில் உடல் நலனை பராமரிக்க என்ன செய்யணும்!!!
    2 Min Read
    ஆரோக்கியத்தை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் காய்கறிகள்
    1 Min Read
    மாசுக்களால் முடி உதிர்வதை தடுக்க எளிய குறிப்புகள்
    1 Min Read
    ஜனநாயகன் படம் வெளியாக அனுமதி கிடைக்குமா? அர்ச்சனா பட்நாயக் சொன்னது என்ன?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: புதுச்சேரி தேர்தல் களத்தை சூடாக்கும் ரங்கசாமி: பாஜகவை புறக்கணிக்கிறாரா?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > புதுச்சேரி தேர்தல் களத்தை சூடாக்கும் ரங்கசாமி: பாஜகவை புறக்கணிக்கிறாரா?
அரசியல் செய்திகள்

புதுச்சேரி தேர்தல் களத்தை சூடாக்கும் ரங்கசாமி: பாஜகவை புறக்கணிக்கிறாரா?

Nagaraj
Last updated: March 20, 2026 7:47 am
By Nagaraj 2 Min Read
Share
SHARE

புதுச்சேரி: பேச்சுவார்த்தைக்கு வராமல் பாஜகவை இழுத்தடித்து வருகிறார் ரங்கசாமி. இதனால் அவர் தவெக கூட்டணிக்கு தயாராவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி இந்தத் தேர்தலுக்கும் தொடர்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் பாஜக மற்றும் அதிமுக, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் தொடங்கி இருக்கும் லட்சிய ஜனநாயகக் கட்சி ஆகியவை எஞ்சிய 14 தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வது எனவும் முடிவானது.

ஆனால் திடீரென போர்க்கொடி தூக்கிய என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான ரங்கசாமி தனக்கு, இந்த முறையிலான கூட்டணியில் உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார். தனது ஆட்சிக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வந்த லட்சிய ஜனநாயக் கட்சியை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்பது உள்ளிட்ட சில முக்கிய நிபந்தனைகளை அவர் வைத்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து ரங்கசாமியை சமாதானப்படுத்த புதுச்சேடி பாஜக-வினர் பல வகையிலும் முயன்றனர். அவர் எந்த சமரசத்துக்கும் உடன்படவில்லை. இதனால், பேச்சுவார்த்தைக்காக புதுச்சேரி வந்திருந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநில பாஜக தலைவர் வி.பி.ராமலிங்கம், பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பாஜக தலைமையிடம் பேசுவதற்காக டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

டெல்லியில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரங்கசாமியின் நிபந்தனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனை அடுத்து, கூட்டணியில் இடம்பெறும் லட்சியஜனநாயகக் கட்சியால் எந்தப் பிரச்சினையும் வராத வகையில் பாஜக பார்த்துக் கொள்ளும் எனவும் அவர்கள் தாமரைச் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் எனவும் ரங்கசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக இன்னும் விரிவாக பேசுவதற்காக மன்சுக் மாண்டவியா தலைமையில் டெல்லி சென்ற குழுவினர் நேற்று காலை புதுச்சேரி திரும்பினர். நேற்று பிற்பகலிலேயே இவர்கள் ரங்கசாமியை சந்தித்துப் பேசுவதாக இருந்தது ஆனால் இந்த சந்திப்பை தவிர்க்க நினைத்த ரங்கசாமி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனத்துக்குச் செல்வதாகச் சொல்லி முன்கூட்டியே புறப்பட்டுச் சென்றுவிட்டார். மீனாட்சியம்மன் கோயில் தரிசனத்தை முடித்துக் கொண்டு அவர் திருச்செந்தூர் செல்லவிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

பாஜக கூட்டணிக்கு சம்மதித்துவிட்டு ரங்கசாமி ஏன் இப்படி இழுத்தடிக்கிறார் என என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்த போது “தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதை ரங்கசாமி விரும்பவில்லை” என்று சுருக்கமாகச் சொன்னார்கள். இதனால் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், அதிமுக, பாமக, லட்சிய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைக்கும் என தெரிகிறது.

அதேபோல், ரங்கசாமியும் தவெக உடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்கலாம். “அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை என்பதால் நேற்றைய தினம் ரங்கசாமி எந்த முடிவையும் அறிவிக்காமல் இழுத்திருக்கலாம்.

அநேகமாக இன்று அவரிடம் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகக் கூடும்” என்றும் சொல்கிறார்கள். புதுச்சேரியில் இரண்டு முக்கிய கூட்டணிகளுமே இன்னும் இறுதி வடிவம் எடுக்க முடியாமல் இழுபட்டு வரும் நிலையில், திங்கள் கிழமையுடன் இங்கே வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

மேலும் 250 கம்பெனி துணை ராணுவப்படை வர உள்ளனர்.., தேர்தல் அதிகாரி தகவல்

திருவையாறு தொகுதி திமுக வேட்பாளர் யார்? தலைமை கை காட்டப்போவது யாரை?

திமுகவின் ஸ்லீப்பர் செல்தான் ஆதவ்… ஜோஸ் சார்லஸ் விமர்சனம்

பொய்யான பிரச்சாரம்.. வதந்திகளை நம்பாதீங்க.. இப்தார் விழாவில் விஜய் ஓப்பன் டாக்

ஆவடி தொகுதியில் சசிகலா போட்டியிடுகிறாரா?

TAGGED:BJP allianceDeadlineImportant announcementNomination FilingPuducherryRangasamyஅவகாசம்பாஜ கூட்டணிபுதுச்சேரிமுக்கிய அறிவிப்புரங்கசாமிவேட்புமனுதாக்கல்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
ஆன்மீகம்

குழந்தை வரம் அருளுகிறார் கொடுமுடிநாதர்… பக்தர்களின் குறை தீர்க்கும் அற்புத தலம்

By Nagaraj 4 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?